ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.
சென்னிமலையில் 63 மி.மீட்டர் மழையளவு பதிவானது.
ஈரோட்டில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், சத்தியமங்கலம், கோபி, சென்னிமலை, பெருந்துறை, கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):
சென்னிமலை 63, அரச்சலூர் 43, ஓலப்பாளையம் 34, கோபி 33, மொடக்குறிச்சி 32, ஒரத்துப்பாளையம் 25, முத்தூர் 25, ஈரோடு 21, சிவகிரி 17, புங்கம்பாடி 15.4, கவுந்தப்பாடி 15.2, பவானி 15, பெருந்துறை 14.1, கொடிவேரி 11, எலந்தகுட்டைமேடு 9, சத்தி 6, பவானிசாகர் 5.2 என்ற அளவில் மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

