கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

சிங்கம்பேட்டையில் பேருந்துகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்

பவானியை அடுத்த சிங்கம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :

பவானியை அடுத்த சிங்கம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பவானி - மேட்டூர் சாலையில் சிங்கம்பேட்டை கேட் எனும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் ஈரோடு, மேட்டூர் செல்வதற்காக சுற்று வட்டார கிராம மக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிறுத்த்தில் பெரும்பாலான பேருந்துகள் நின்று செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.

 இதனால், வெள்ளிக்கிழமை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிங்கம்பேட்டை கேட் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி அரசு,  தனியார் பேருந்துகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து, தகவலறிந்த அம்மாபேட்டை போலீஸார் அப்பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், காவல் துணைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.