ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

160 பயனாளிகளுக்கு கைத்தறி நெசவுப் பயிற்சி: கைத்தறி உதவி இயக்குநர் தகவல்

கைத்தறி நெசவாளர் பயிற்சி மையம் மூலமாக ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 160 பயனாளிகளுக்கு கைத்தறி நெசவுப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கைத்தறி உதவி இயக்குநர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Updated On :

கைத்தறி நெசவாளர் பயிற்சி மையம் மூலமாக ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 160 பயனாளிகளுக்கு கைத்தறி நெசவுப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கைத்தறி உதவி இயக்குநர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

 ஈரோட்டில் அசோகபுரம் பகுதியில் கைத்தறி நெசவாளர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் நிதியுதவியுடன் இந்த பயிற்சி மையத்தில் மாதம் ஒன்றுக்கு 30 நாள்களுக்கு ஒரு தொகுதி வீதம் 50 கைத்தறி நெசவாளர்களுக்கு புதிய யுக்தியில் பல்வகை கைத்தறி ரகங்களில் நெசவுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 2015-16 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் 2015-16 இன் கீழ் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 160 பயனாளிகளுக்கு கைத்தறி நெசவுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

 இப்பயிற்சி மையத்தில் ஒரு வகுப்பறை, 14 கைத்தறிகள், ஒரு பெடல் தறி, மிதிவண்டி ராட்டை, மின்சார ராட்டை, கணினி வடிவமைப்பு மையம், ஜக்கார் அட்டை துளையிடும் கருவி ஆகிய வசதிகள் உள்ளன. மேற்படி, 160 பயனாளிகளுக்கு ஹனிகோம்ப் டிசைன் துண்டு, ஹக்க பாக் துண்டு, பர்னிசிங் துணி, தசரா டிசைன், நயா பைசா டிசைன், தென்னம்பாளை டிசைன், சபையன் டிசைன் ஆகிய பெட்ஷீட் ரகங்களும் கைத்தறி நெசவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கைத்தறி நெசவில் அனுபவமிக்க இரண்டு கைத்தறி நெசவுப் பயிற்றுநர்கள் பயனாளிகளுக்கு ஒரு தொகுதிக்கு 50 நாள்கள் வழங்குகின்றனர். இப்பயிற்சியின் போது பயனாளிகளுக்கு பயிற்சி உதவித் தொகையாக நாள் ஒன்றுக்கு ரூ. 150 வீதம் 50 நாள்களுக்கு வழங்கப்படும்.

 இப்பயிற்சிக்காக மத்திய, மாநில அரசுகளின் மானியத்தொகை மொத்தம் ரூ. 16 லட்சத்து 96 ஆயிரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் போது, பயனாளிகள் வகுப்பறை பயிற்சியும், கைத்தறிகளில் செயல்முறை பயிற்சியும் பெறுவர். இப்பயிற்சியின் மூலமாக நெசவாளர்களின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்த முடியும். தரமான துணிகளை உற்பத்தி செய்ய முடியும். பல்வகை நூல்கள், துணிகள், கைத்தறிகள், நெசவுத்தொழில் யுக்திகள் குறித்த விழிப்புணர்வை பயனாளிகள் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.