
பெருந்துறை, வெள்ளோடு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட ஆள் கடத்தல் வழக்குத் தொடர்பாக பெருந்துறை நீதிமன்றத்தில் யுவராஜ் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
சேலம் மாவட்டம், அக்கம்மா காலனியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் யுவராஜ் (40). இவர் மீது 2013-ஆம் ஆண்டு ஆள் கடத்தல் சம்பந்தமாக பெருந்துறை காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், வெள்ளோடு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணை பெருந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே, திருச்செங்கோடு பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆள் கடத்தல் தொடர்பான வழக்கு தொடர்பாக பெருந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் ஆஜர்படுத்துவதற்காக வேலூர் சிறையில் இருந்து யுவராஜ் அழைத்துவரப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் யுவராஜை, பெருந்துறை நீதிமன்றத்தில் போலீஸார் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ரேய்கான்பர்வீன், வரும் 18-ஆம் தேதி மீண்டும் யுவராஜை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





