கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சார்பாக ஒருநாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பவானி நகர்மன்றத் தலைவரும், கல்லூரி செயலருமான கே.சி.கருப்பணன் தலைமை வகித்தார். கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜி.ரவிச்சந்திரன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.
இக்கருத்தரங்கில், அறிக்கை சமர்ப்பித்தல், தொழில்நுட்ப விநாடி- வினா, மல்டி மீடியா மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழ்நாட்டிலுள்ள 30 கல்லூரிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில், கல்லூரித் தலைவர் ப.வெங்கடாசலம், முதல்வர் ப.தங்கவேல், கல்லூரியின் அறங்காவலர் கே.ஆர்.கவியரசு, துறைத் தலைவர் ஆர்.முத்துக்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக சாம்பியன்ஷிப்: அறிமுக போட்டியில் உனாட்டி ஹூடா த்ரில் வெற்றி!

நல்ல கதைகளில் நடிக்க விரும்புகிறேன்: அதிதி ஷங்கர்

லடாக்கில் 11,800 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான கிரிக்கெட் திடல்!

அஸ்ஸாம் வெள்ளப் பேரழிவு: பலி 105 ஆக உயர்வு!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


