ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

"விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்'

விவேகானந்தரின் சிந்தனைகளை இன்றைய இளைஞர்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ப.கமலக்கண்ணன் வலியுறுத்தினார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

விவேகானந்தரின் சிந்தனைகளை இன்றைய இளைஞர்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ப.கமலக்கண்ணன் வலியுறுத்தினார்.

 பாரதியார் பல்கலை., பல்கலை. மேற்படிப்பு விரிவாக்க மையம் ஆகியவை இணைந்து ஈரோட்டில் வியாழக்கிழமை நடத்திய சுவாமி விவேகானநந்தரின் தேசிய மறுமலர்ச்சி சிந்தனைகள் குறித்த ஒரு நாள் பயிலரங்கத்தில் அவர் பேசியதாவது:

 ஆன்மிக கொள்கைகளை அடிப்படையாக விவேகானந்தர் கொண்டிருந்தாலும், பகுத்தறிவு சிந்தனைகளும் அவரிடம் இருந்தன. மதம் என்பது கோட்பாடுதான் என்பது அவரது நிலைப்பாடு. ஆன்மிகத்தில் உள்ள மூடநம்பிக்கை, சடங்குகளை எதிர்த்து போர்க்குரல் எழுப்பியவர் விவேகானந்தர்.

 காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களுக்கு இணையாக விவேகானந்தரும் தேசப்பற்று கொண்டிருந்தார். விவேகமுள்ள இளைஞர்களால் சமுதாயத்தை புரட்டிப்போட முடியும் என்பது அவரது நம்பிக்கை.

 விவேகானந்தரின் கருத்துகளை இன்றைய இளைஞர்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். தீய சிந்தனைகளில் இருந்து இந்தியாவை பாதுகாக்க விவேகானந்தரின் சிந்தனைகள் உதவும் என்றார்.

  கருத்தரங்கில், மதுரை சுவாமி விவேகானந்தர் சேவாஸ்ரமம் தலைவர் சுவாமி சதாசிவானந்தா, பாரதியார் பல்கலைக்கழகம் பட்ட மேற்படிப்பு விரிவாக்க மைய இயக்குநர் (பொ) து.கலாமணி, சுவாமி விவேகானந்தர் உயராய்வு மற்றும் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் தே.ஞானசேகரன், உதகை அரசு கலைக் கல்லூரி முதுகலை மற்றும் தமிழியல் உயராய்வுத் துறை உதவிப் போராசிரியர் அர.தர்மலிங்கன், நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ந.தேவராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.