தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் யோகா பட்ட படிப்புகள் தொடக்கம்

உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் யோகமும், மனித மாண்பும் பட்ட, பட்டயப் படிப்புகள் தொடக்க விழா ஈரோடு அறிவுத்திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :16 செப்டம்பர் 2016, 2:19 am

உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் யோகமும், மனித மாண்பும் பட்ட, பட்டயப் படிப்புகள் தொடக்க விழா ஈரோடு அறிவுத்திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன், இப்படிப்புகளை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, வேதாத்திரி மகரிஷி ஆன்மிக மற்றும் உள்ளுணர்வு கல்வி நிலையம் இதுவரை 29 பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்று சான்றிதழ், பட்டயம், இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், முதுகலை ஆராய்ச்சி, முனைவர் பட்டம் ஆகியவற்றை பயிற்றுவித்து வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
 இதில், உடற்பயிற்சி, தியானப்பயிற்சி, காயகல்ப பயிற்சி, அகத்தாய்வு பயிற்சிகள் ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன என்றார்.
 நந்தா பொறியியல் கல்லூரி முதல்வர் என்.ரெங்கராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில், ஈரோடு மனவளக்கலை மன்ற ஈரோடு மண்டலத் தலைவர் ஆர்.சுந்தரம், மன்ற திட்ட அலுவலர்கள் டி.சுமதி, ஆர்.ராதா, பொருளாளர் என்.ஆனந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.