தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் வீரர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளம் மெதுவாக இருந்ததாக நினைக்கிறேன். டாஸ் மிகவும் முக்கியமானதாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சற்று பனிப்பொழிவு இருந்ததால், டாஸ் மிகவும் முக்கியமானதாக இருந்தது. நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
160 ரன்களுக்குள் தில்லி கேபிடல்ஸை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 160 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், நாங்கள் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க வேண்டும். அதனை செய்யத் தவறிவிட்டோம். சமீர் ரிஸ்வி நன்றாக விளையாடினார். 10 ஓவர்களுக்குள்ளாக அவரது விக்கெட்டினை வீழ்த்தியிருந்தால் ஆட்டம் சுவாரசியமாக இருந்திருக்கும் என்றார்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தனது அதிரடியான பேட்டிங் மூலம் வெற்றி பெற்றுத் தந்தார் சமீர் ரிஸ்வி. அதிரடியாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Mumbai Indians player Deepak Chahar has revealed the reason for the team's defeat in the match against Delhi Capitals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!

சமீர் ரிஸ்வி மீண்டும் அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 2-வது வெற்றி!

கேகேஆர் அணியின் கிண்டல் பதிவுக்குப் பதிலளித்த மும்பை இந்தியன்ஸ்..! சாதனைக்குமேல் சாதனை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


