சுகாதாரத்தை மீறுபவர்களுக்கு அபராதம்: வரி செலுத்துவோர் சங்கம் கோரிக்கை
சுகாதாரத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து மாநகராட்சி நிர்வாகம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று ஈரோடு வரிசெலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம் வலியுறுத்தியுள்ளது.


சுகாதாரத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து மாநகராட்சி நிர்வாகம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று ஈரோடு வரிசெலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சென்னியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ராதாமணி பாரதி, குட்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பாரதி வரவேற்றார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க செயலர் பாரதி கூறியதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காலத்தில் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை சேகரிக்க வரி வசூலித்து வருகிறது.
ஆனால் மாநகராட்சியில் வாரத்துக்கு ஒருமுறை கூட சாக்கடை தூர்வாரவில்லை. போதிய துப்புரவுப் பணியாளர்களையும் நியமிக்காமல் குப்பைக்கு என வீட்டு உரிமையாளரிடம் தனியே வரி வசூல் செய்கின்றனர்.
ஏற்கெனவே குடியிருக்கும் வீட்டின் பரப்பை பொருத்தும், வர்த்தக நிறுவனங்கள், கடைகளுக்கும் தனித்தனியே வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாக்கடைகளை தூய்மையாக வைப்பது போன்ற எந்தப் பணியையும் மாநகராட்சி நிர்வாகம் செய்வதில்லை.
அதேநேரத்தில் குப்பைகளை வீதியில் கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் எந்த அபராதமும் விதிப்பதில்லை. எனவே, சுகாதாரத்தை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் வீட்டு உரிமையாளரிடம் குப்பைக்காக வரி வசூலிப்பதை கைவிட வேண்டும். டெங்கு கொசு ஒழிப்புக்காக அதிகாரிகள் அபராதம் விதிப்பு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் போதிய நிதியை மத்திய அரசு மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...