மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:27 am

DIN

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தாளவாடி வட்டாரத்தில் உள்ள மரூர் கிராமத்தில் உள்ள பால் குளிரக வளாகத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல்  கண்டறியப்பட்டது. இதுகுறித்து, தொல்பொருள் ஆர்வலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஈரோடு சக்தி பிரகாஷ், ஓமலூர் சீனிவாசன் ஆகியோர்  மரூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இரண்டு நிலையாக அமைந்துள்ள நடுகல்லில் 3 வீரர்கள் போர் புரிவது போலவும், இரண்டாம் நிலைக் கற்களில் இறந்த வீரர்களை தேவகன்னிகள் அழைத்துச் செல்வது போலவும் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள தொல்லியல் மேடுகளை அகழாய்வு செய்தால் பல தொன்மையான தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.