கபடி போட்டி:சத்தியமங்கலம் காமதேனு கல்லூரி இரண்டாமிடம்

கோவை பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கபடி போட்டியில் காமதேனு கலைக்கல்லூரி இரண்டாமிடம் பிடித்துள்ளது.
Updated on
1 min read

கோவை பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கபடி போட்டியில் காமதேனு கலைக்கல்லூரி இரண்டாமிடம் பிடித்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 119 உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கபடி போட்டி சத்தியமங்கலம் காமதேனு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 119 கல்லூரிகளில் இறுதிப் போட்டியில் 5 அணிகள் மோதின. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோவை சிஎம்எஸ் கல்லூரியும்,  இரண்டாமிடத்தை சத்தியமங்கலம் காமதேனு கலைக்கல்லூரியும்,  மூன்றாமிடத்தை சங்கரா கல்லூரியும் நான்காம் இடத்தை பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜர் கல்லூரியும் பிடித்தன.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பையை காமதேனு கலைக் கல்லூரி தாளாளர் ஆர்.பெருமாள்சாமி வழங்கினார். பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் முருகவேல் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில்,  கல்லூரி செயலாளர் பி.மலர்ச்செல்வி,  கல்லூரி முதல்வர் கே.செந்தில்குமார்,  பேராசிரியர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com