மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பல ஆண்டுகளுக்குப் பிறகு பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடிய கிராம மக்கள்

வெள்ளோட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் வருகை இல்லாததால் அப்பகுதி கிராம மக்கள் தீபாவளியையொட்டி புதன்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:10 am

DIN

வெள்ளோட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் வருகை இல்லாததால் அப்பகுதி கிராம மக்கள் தீபாவளியையொட்டி புதன்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சென்னிமலை ஒன்றியம்,  வெள்ளோட்டில் பறவைகள் சரணாலயம் உள்ளது.  இங்குள்ள பறவைகளுக்கு இடையூறு கொடுக்கக் கூடாது என்பதற்காக  கிராம மக்கள்,  தீபாவளியின்போது  பட்டாசு வெடிக்க வனத் துறை தடை விதித்து உள்ளது. இதற்கு கிராம மக்களும் ஒத்துழைத்தனர்.
இந்நிலையில்,  கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் வறட்சியால் குளம் முற்றிலும் வற்றியது.  இதையடுத்து,  பறவைகள் வருகை குறைந்து,  தற்போது சுத்தமாக பறவைகள் வருகை நின்று போனது.
ஆகவே,  சரணாலயத்தை, சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி,  புதன்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பறவைகள் இல்லாத காரணத்தால்,  கிராம மக்கள் இந்த தீபாவளியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். தடை ஏதும் விதிக்கப்படவில்லை. குளத்தில் தண்ணீர் நிரம்பி,  பறவைகள் வந்தால் அது பற்றி யோசிப்போம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.