தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

அதிவேகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டும் இளைஞர்களுக்கு போலீஸார் அறிவுரை

ஈரோடு நகரில் முக்கியச் சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற

Updated On :19 ஏப்ரல் 2018, 1:26 am IST

ஈரோடு நகரில் முக்கியச் சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற  இளைஞர்களுக்கு போலீஸார் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் சம்பவங்கள் குறித்து காவல் துறையினருக்குத் தொடர்ந்து பல்வேறு புகார்கள் சென்றன. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இரவு நேரங்களில் அதிரவைக்கும் சப்தத்துடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை இயக்கப்படுவதைத்  தடுத்து நிறுத்த வேண்டும் என தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வந்தனர். 
இந்நிலையில், ஈரோடு, பிரப் சாலையில் மாநகர் போக்குவத்துப் பிரிவு சார்பில்  திங்கள்கிழமை இரவு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை கண்காணிப்பாளர் சேகர்  தலைமை வகித்துப் பேசுகையில், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலைகளில் இளைஞர்கள் இருசக்கர வாகன பந்தயம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, ஈரோடு மாநகருக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 25 பேர் இருசக்கர வாகனங்கள் வேகமாக இயக்குவதைக் கைவிடுவதாக உறுதி ஏற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.