அந்தியூர் அருகே தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான், தெருநாய்கள் கடித்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி, சென்றாயனூர் பகுதியில் உள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க வனப் பகுதியிலிருந்து மான்கள் கூட்டமாக வந்துள்ளன. அப்போது, தெருநாய்கள் மான்களைத் துரத்தியுள்ளன. இதில், தனியே சிக்கிய மானை நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்தன. இதையடுத்து, நாய்களைத் துரத்திய அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வெள்ளிதிருப்பூர் கால்நடை மருத்துவர் ரவிசந்திரன், வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்க்கையில் ஏற்கெனவே மான் உயிரிழந்ததும், ஒரு வயதான பெண் புள்ளிமான் என்பதும் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அப்படீங்களா!
பேல்பூரி

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


