ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள தேசிய வேளாண் சந்தைத் திட்டம் (இ-நாம்) திட்டத்தால் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து, வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை ஈரோடு விற்பனைக்குழு வெளியிட்ட தகவல்:
விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைத்து வருவாயை உயரச் செய்யும் நோக்கில் தேசிய வேளாண் சந்தை திட்டம் (இ-நாம்) 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடக்கி வைக்கப்பட்டது. நாடெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மேற்படி திட்டத்தின்படி மின்னணு வர்த்தகத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருள்களை தேசிய அளவிலான சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவாயைப் பெருக்கவும், நாடெங்கிலும் உள்ள வர்த்தகர்கள் தங்களுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையில் வாங்கும் வகையிலும், தேசிய வேளாண் சந்தை எனும் மின்னணு வர்த்தக முறையை தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும், மேலும் தற்போது 8 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும் தேசிய வேளாண் சந்தைத் திட்டத்தில் (இ-நாம்) இணைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும் இணையம் மூலம் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் மொத்தம் 585 வேளாண் சந்தைகள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன. அதன்படி, ஈரோடு விற்பனைக் குழுவில் அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தேசிய வேளாண் சந்தை தொடங்கப்பட்டு நிலக்கடலை, மக்காச்சோளம், தேங்காய்ப்பருப்பு ஆகிய பொருள்களின் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்படி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மின்னணு வர்த்தகத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுவதால் மாநில, தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான வர்த்தகர்களைப் பங்குபெறச் செய்து விவசாயிகளின் விளை பொருள்களுக்குத் தரம் பிரித்து பகுப்பாய்வு மேற்கொண்டு மாதிரிகள் வைத்து சந்தைப்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படுகிறது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மார்ச் 2018 முதல் தேசிய வேளாண் சந்தைத் திட்டத்தில் இணைக்கப்பட்டு விவசாயிகள், வணிகர்களின் தகவல்கள் பதிவேற்றம்செய்யப்பட்டு வருகின்றன. மேலும், மூன்றாம் கட்டமாக ஈரோடு, அவல்பூந்துறை, பூதப்பாடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தொடங்கப்படவுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளுக்கு மின்னணு பணப் பரிமாற்றம் மூலமும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விளை பொருள்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு மின்னணு பணப் பரிமாற்ற முறையில் கிரயத் தொகை முழுவதும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு விவசாயிகள் தங்களது விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வரும்போது தங்களது வங்கிக் கணக்கு எண், விவரங்கள் அடங்கிய வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வந்து விற்பனைக்கூட அலுவலர்களிடம் காண்பித்து லாட் எண் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
இ-நாம் மூலம் பரிவர்த்தனைப் பணிகள் முடிவுற்று விவசாயிகள் தங்களது விளை பொருள்களுக்கான விலையை உடனடியாக அறிந்து கொள்ளலாம். நாள் முழுவதும் காத்திருக்கத் தேவையில்லை. மற்ற பணிகளை கவனிக்கலாம். பரிவர்த்தனைப் பணிகள் முடிவுற்று எவ்வித பிடித்தமின்றி கிரயத் தொகை முழுவதும் உடனடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பணத்துக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். இந்தியா முழுவதும் உள்ள வேளாண் விளை பொருள்கள் தொடர்பான தகவல்கள், சேவை அனைத்தையும் தேசிய வேளாண் சந்தை செயலியில் தெரிந்து கொள்ள முடியும். விவசாயிகள் விளை பொருள்களை ஆய்வகங்கள் மூலம் தரம் வாரியாகப் பிரித்து நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் சந்தை செயல்படுத்தப்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வரத்து விவரங்கள், விளை பொருள்களின் விலை விவரங்களை விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும். ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அமைப்பு, வெளிப்படையான பரிவர்த்தனைகள், அதிக எண்ணிக்கையிலான வணிகர்கள் கலந்துகொள்வதால் போட்டி விலை மூலம் அதிகபட்ச விலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் விளை பொருள்களின் விலை விவரங்களை இ-நாம் திட்டம் மூலம் விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


