ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

தமிழ்ச் சமூகத்தில் பாரதியின் தாக்கம் அதிகம்: பேராசிரியர் த.ராஜாராம்

தமிழ்ச் சமூகத்தில் பாரதியின் தாக்கம் அதிகமாக  உள்ளது என்று பேராசிரியர் த.ராஜாராம் பேசினார்.

Published On :

தமிழ்ச் சமூகத்தில் பாரதியின் தாக்கம் அதிகமாக  உள்ளது என்று பேராசிரியர் த.ராஜாராம் பேசினார்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிக்கு, அக்னி  ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எம்.சின்னசாமி தலைமை வகித்தார். ஆர்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில்,  "அக்னிக் குஞ்சுகள்' என்ற தலைப்பில் பேராசிரியர் த.ராஜாராம் பேசியதாவது: 
தமிழ் எழுத்துகளுக்கு நெற்றிக்கண் கொடுத்த எட்டயபுரத்துச் சூரியனாக பாரதி திகழ்கிறார். தமிழ்த் தாய் ஆயிரம் ஆண்டுகள் கருவுற்றுப் பெற்ற பிள்ளை பாரதி.  
பாரதியும் அவர் கண்டெடுத்த மற்றொரு அக்னிக்குஞ்சான பாரதிதாசனும் பெண்மையைப் போற்றக் கூடியவர்கள். ஆகவேதான் விதவை என்ற கோட்பாட்டை அகற்ற வேண்டும் என்று எண்ணினர். 
பாரதியைப் போன்ற துணிச்சலான கவிஞர் யாரும் இருக்க முடியாது. சுவாமி விவேகானந்தரின் தாக்கம் பாரதியிடம் உள்ளது. கல்வி கற்பதன் மூலம் ஒருவரை அறிவாளியாகத் தீர்மானிக்க முடியாது. வாழ்க்கையைக் கற்றவர்கள்தான் உண்மையான அறிவாளி. இதனை பாரதியின் பாடல்கள் மூலம் காண முடியம். 
எல்லா உயிர்களிடத்திலும் தன்னைக் காண்பவன்தான் கவிஞனாக இருக்க முடியும் என்பதை சமூகத்துக்கு உணர்த்தியவர் பாரதி. சமூகப் பிரச்னைகளை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியவர் பாரதி.
தற்போது தமிழர்கள் தமிழ் பேச தயக்கம் காட்டுவது சோகத்தை ஏற்படுத்துகிறது. உறவுச் சொற்களைக் கூட தமிழில் அழைக்க கூச்சம் கொண்டுள்ளோம்.  மொழிக்கும் , சமுதாயத்துக்கும் இடையே உறவு உள்ளது. சமுதாயம் பயிர் என்றால் அதன் வளர்ச்சிக்கு நீராக அமைவது மொழி என்றார்.
இதைத் தொடர்ந்து, "கண்ணதாசன் என்னும் கடல்' என்ற தலைப்பில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசியதாவது:
கண்ணதாசனின் படைப்புகளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். பண்டித மொழியில் பேசாமல் எளிய மொழியில் பேசி நமது மனதுக்கு நெருக்கமானவர் அவர். திரைப் பாடல்கள் மூலம் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தவர். மனிதனின் எந்த வாழ்க்கைச் சூழலுக்கும் பொருந்தக் கூடிய பாடல்களை அவர் இயற்றியுள்ளார்.  சமத்துவத்தையும், மனிதனின் பிரச்னைகளையும் பாடலாக வடித்தவர்  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.