பெருந்துறை ஒன்றியத்தில் ரூ. 35.47 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வெட்டையன்கிணறு ஊராட்சி, கணபதி நகரில், ரூ. 25.47 லட்சம் செலவில் புதிதாக தார் சாலையும், பெத்தாம்பாளையம் பேரூராட்சி, செங்கோடம்பாளையத்தில், ரூ.10 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டியும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார். இதில் பெருந்துறை வட்டார சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் துரைசாமி, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாகுமார், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, வெட்டையன்கிணறு ஊராட்சி முன்னாள் தலைவர் தாமோதரன், பெருந்துறை கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத் துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

