சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

கிறிஸ்தவ வழிபாட்டுக் கூடம் முற்றுகை

ஈரோடு அருகே கிறிஸ்தவ மத வழிபாடு நடத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, வழிபாட்டுக் கூடத்தை முற்றுகையிட முயன்றதால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பான சூழல் நிலவியது.  

Updated On :

ஈரோடு அருகே கிறிஸ்தவ மத வழிபாடு நடத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, வழிபாட்டுக் கூடத்தை முற்றுகையிட முயன்றதால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பான சூழல் நிலவியது.  
ஈரோட்டை அடுத்த பச்சப்பாளி சாலை, இந்திரா நகர் பகுதியில் ஒரு வீட்டில் கடந்த இரு வாரங்களாக கிறிஸ்தவ மத வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. அங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு நடைபெற்ற நிலையில்,  அப்பகுதியைச்  சேர்ந்த பொதுக்கள் திடீர் எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 
இந்திரா நகர், முதலியார் தோட்டம்,  டாலர்ஸ் காலனி, கங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபாட்டுக் கூடத்தை முற்றுகையிடத் திரண்டதோடு, மதவழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் முறையான அனுமதி பெறாமல் மத வழிபாடு நடத்தக் கூடாது என அறிவுறுத்தியதோடு, வழிபாட்டுக் கூடத்தை மூடுமாறும் உத்தரவிட்டனர்.  இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.