கர்நாடகத்திலிருந்து ஈரோட்டுக்கு சரக்கு ரயில் மூலம் 1,400 டன் சர்க்கரை வந்துள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பல்வேறு மாநிலங்களில் இருந்து உணவுப் பொருள்கள் கொள்முதல் செய்து, ஈரோட்டில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, அந்தப் பொருள்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், பொது விநியோகத் திட்டத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான சர்க்கரையை கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், நவலிகால் பகுதியில் உள்ள அதானி சர்க்கரை நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அங்கு 1,400 டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு சரக்கு ரயில் மூலம் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த இந்த ரயிலில் உள்ள 23 பெட்டிகளில் எடுத்து வரப்பட்ட 1,400 டன் சர்க்கரையை தொழிலாளர்கள் சரக்கு ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து லாரியில் ஏற்றப்பட்ட சர்க்கரை ஈரோடு மூலப்பாளையம், பவானி சாலையில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சேமிப்புக் கிடங்குகளில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சர்க்கரை அனுப்பி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிப்படவுள்ளதாக நுகர் பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆதாரம் கேட்ட எதிர்க்கட்சி! திடீரென எழுந்த முதல்வர் விஜய்! | TVK | TN Assembly

அடுத்த 2 மணி நேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை!

கொலம்பியா நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 312 ஆக அதிகரிப்பு! 290 பேர் மாயம்!

அனுபமா பரமேஸ்வரன் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்: அதிதி ஷங்கர்
விடியோக்கள்

"பேசணும்னு பேசாதீங்க!" பேரவையில் பொங்கிய அமைச்சர் ஆனந்த் | TVK | DMK | ADMK


