
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (டிசம்பர் 20) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மு.சீனிஅஜ்மல்கான் வெளியிட்ட தகவல்:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்காக சிறப்பு முகாம் வியாழக்கிழமை (டிசம்பர் 20) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை ஈரோடு மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அதில், அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த மனை உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆன்லைனில் கடந்த 16.11.2018 தேதிக்கு முன்னதாக ரூ. 500 செலுத்தி பதிவு செய்தவர்கள் மட்டும் தங்களுடைய மனையின் கிரையப் பத்திரம், மனைப் பிரிவு வரைப்படங்கள் 4 நகல், அடையாள அட்டை, அண்மையில் பெறப்பட்ட வில்லங்கச் சான்று ஆகியவற்றுடன் கலந்துகொண்டு மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






