கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

பூதப்பாடியில் ரூ. 11.05 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 11.05 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 11.05 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இங்கு விற்பனைக்கு வந்த 8,742 தேங்காய்களில் சிறியவை ரூ. 7.10 முதல் பெரியவை ரூ. 17 வரையில் என மொத்தம் ரூ. 76,483 க்கும், 67 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 81.90 முதல் ரூ. 107.89 வரையில் என ரூ. 1,74,642 க்கும், 183 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ. 43.50 முதல் ரூ. 51.10 வரையில் என ரூ. 3,18,165 க்கும் விற்பனையானது.
116 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 12.38 முதல் ரூ. 20.63 வரையில் என ரூ. 1,16,166 க்கும், 47 மூட்டைகள் எள் கிலோ ரூ. 121.29 முதல் ரூ. 132.19 வரையில் என ரூ. 3,94,579 க்கும், 15 மூட்டைகள் மக்காச்சோளம் மூட்டை கிலோ ரூ. 17.17 வீதம் ரூ. 25,205 க்கும் ஏலம் போயின. 
மொத்தம் 478 மூட்டைகள் விவசாய விளைபொருள் ரூ. 11,05,240 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், அம்மாபேட்டை, பூதப்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.