ஈரோடு மாவட்ட இறகுப்பந்துக் கழகம் சார்பில், மாநில அளவிலான மூத்தோர் பிரிவு இறகுப்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
ஈரோடு நீல்கிரீஸ் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் ஈரோடு மாவட்ட இறகுப்பந்து கழகத் தலைவர் எம்.செல்லையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலாளர் எஸ்.சுரேந்தர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
இதில், 35 வயதுக்கு மேற்பட்ட 40, 45, 50, 55, 60, 65, 70 ஆகிய வயதுக்கு உள்பட்டோர் பிரிவுகளில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டனர்.
டிசம்பர் 23 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, பிற்பகலில் நடைபெறும் பரிசளிப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு இறகுப்பந்துக் கழகத்தின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், செயலாளர் அருணாசலம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு, சான்றிதழ்களை வழங்கவுள்ளனர்.
இப்போட்டியில், வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் ஜனவரி 22 இல் கோவாவில் நடைபெறும் தேசிய இறகுப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்கவுள்ளனர். இதில், ஈரோடு மாவட்ட இறகுப்பந்து கழக துணைச் செயலாளர் செந்தில்வேலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்! தர்மன் படக்குழு கொண்டாட்டம்!

திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைது

மூன்றாவது வீரராக களமிறங்கி சதம் விளாசி அசத்திய தேவ்தத் படிக்கல்; அதே இடத்தில் தொடர்வாரா?
திமுக - அதிமுக இணைய வாய்ப்புள்ளதா? என்ன சொல்கிறார் கனிமொழி எம்.பி.?
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


