/

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி

கோபி கலை, அறிவியல் கல்லூரி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 5:47 am IST

கோபி கலை, அறிவியல் கல்லூரி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
பேரணியை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கிவைத்துப் பேசுகையில், சுற்றுச்சூழல் துறை சார்பில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்  ஒழிப்பு தடை குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் 110 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டி மூலம் பேரணி சென்று மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர் என்றார்.
இதில், சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியானது, கரட்டடிபாளையத்தில் தொடங்கி கோபிசெட்டிபாளையம் , குன்னத்தூர், திங்களூர், கவுந்தப்பாடி வழியாக மீண்டும் கரட்டடிபாளையத்தில் உள்ள கல்லூரியை வந்தடையும். பேரணியின்போது, ஒலிப்பெருக்கி மூலம் பிளாஸ்டிக் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவித்தும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளர் எம்.தரணீதரன், முதல்வர் வி.தியாகராசு, முதன்மைக் கல்வி அதிகாரி ஆர்.செல்லப்பன், அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.