ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வரும் வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 23) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஈரோடு வட்டத்தில் பேரோடு சமுதாயக்கூடம், கொடுமுடி வட்டத்தில் அஞ்சூர் கிராம சமுதாயக்கூடம், மொடக்குறிச்சி வட்டத்தில் விளக்கேத்தி கிராம நிர்வாக அலுவலகம், பெருந்துறை வட்டத்தில் கோவில்பாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளி, பவானி வட்டத்தில் கவுந்தப்பாடி ஊராட்சி அலுவலகம், அந்தியூர் வட்டத்தில் அம்மாபேட்டை கிராம சமுதாயக் கூடம், கோபிச்செட்டிபாளையம் வட்டத்தில், சவுண்டப்பூர் கிராமம், கணபதிபாளையம் சமுதாயக் கூடம், சத்தியமங்கலம் வட்டத்தில், புளியம்பட்டி சமுதாயக்கூடம், தாளவாடி வட்டத்தில் இக்கலூர் பாலப்படுகை சமுதாயக்கூடம், நம்பியூர் சுண்டக்கம்பாளையம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. இதில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.