மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் பாரதியார் பல்கலைகழக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது.
"எளியமுறையில் தமிழ் இலக்கணப் பயிற்சி' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு, கல்லூரி முதல்வர் சி.வடிவேல் தலைமை தாங்கினார். பேராசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார். கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீரா துவக்கவுரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக திருவையாறு அரசர் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் திருஞானசம்பந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உதவிப் பேராசிரியை ஷர்மிளா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.