ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம், கொள்ளேகாலுக்கு பர்கூர் மலைப் பகுதி வழியாகச் செல்லும் மலைப் பாதை 42 கி.மீ. தொலைவுக்கு ரூ. 72.90 கோடியில் இரு வழித் தடமாக மாற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
அந்தியூர் சட்டப் பேரவைத் தொகுதி, பர்கூர் ஊராட்சி, தாமரைக்கரையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சாலை விரிவுபடுத்தும் பணி தொடக்கம், தமிழ்நாடு மின்சார வாரிய பர்கூர் பிரிவு அலுவலகம் திறப்பு மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஈஎம்ஆர்.ராஜா முன்னிலை வகித்தார்.
இதில்,பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கிவைத்தனர்.
இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அந்தியூர் செல்லம்பாளையம் - பர்கூர் - கொள்ளேகால் சாலை வரை இருவழித்தடமாக 42 கி.மீ. தொலைவுக்கு ரூ. 72.90 கோடி மதிப்பீட்டில் 8.80 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது. மிகவும் குறுகலாக உள்ள பகுதிகளில் மலைச் சாலை, கையேடுகளின்படியும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பாதுகாப்புச் சுவர், மழைநீர் வடிந்து செல்ல 46 சிறுபாலங்கள், பழுதடைந்த 236 சிறுபாலங்கள் சீரமைப்பு செய்யப்படுகின்றன என்றார்.
இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மின்வாரியத் தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜு விஸ்வநாதன், கோபி கோட்டாட்சியர் அசோகன், அந்தியூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் எஸ்.பி.ரமேஷ், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலர் இ.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பகல் பொழுதே நள்ளிரவு போல தோன்றும்! முழு சூரிய கிரணம் எப்போது?

லாட்டரி மார்ட்டினின் ரூ. 457 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு!

முதல்வராக முதல் அரசு விழா! அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதல்வர் விஜய்!

காவல்துறை வாகன ஏலத்தில் மகனுக்காக கண்ணீர்விட்ட தாய்! நெகிழ்ச்சியான சம்பவம்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


