இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

கோபி, சிறுவலூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 7:44 am IST

கோபி, சிறுவலூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்து, தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகத்தை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: 
கிராமத்தில் வாழும் மக்கள் தங்களது உடல்நலன் எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதமாக இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையில் மிக விரைவில் சில மாற்றங்களை உருவாக்க முதல்வரின் ஒப்புதலுடன் பணிகள் நிறைவேற்றப்பட  உள்ளன. பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்பது பள்ளிக் கல்விக்கு ஒரு அச்சாணியைப் போன்றது, இந்த அச்சாணி சில இடங்களில் சரியாக செயல்படுவதில்லை என புகார்கள் வந்துள்ளன. அதை மனதில் கொண்டு இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வருடத்துக்கு மூன்று முறை  பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த வேண்டும் என இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கையைப் பொறுத்தவரை நாற்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எனும் முறையில் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களைச் சேர்த்துள்ள ஆசிரியர்களைப் பாராட்டுவது மட்டுமின்றி கனவு ஆசிரியர் எனும் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆசிரியர் சிறந்து பணியாற்றும் வகையில் இந்தக் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.
விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளுக்கு அந்தத் துறை அமைச்சரிடம் பேசி முதல்வரின் ஒத்துழைப்புடன் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து  அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால் அந்தப் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.