சென்னிமலை வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயி சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
முகாம் நடைபெறும் இடங்கள் :
கவுண்டச்சிபாளையம், முகாசிபுலவன்பாளையம், புங்கம்பாடி, வடமுகம் வெள்ளோடு, தென்முகம் வெள்ளோடு, வரப்பாளையம், ஈங்கூர், கொங்கம்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு வெள்ளோடு நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் புதன்கிழமை ( ஜூலை 25) நடைபெறுகிறது.
சென்னிமலை, பசுவபட்டி, எக்கட்டாம்பாளையம், எல்லைக்கிராமம், கொடுமணல், கூத்தம்பாளையம், அட்டவணை பிடாரியூர், குப்பிச்சிபாளையம், முகாசிபிடாரியூர், முருங்கத்தொழுவு, நஞ்சை பாலதொழுவு, புஞ்சை பாலதொழுவு, ஒரத்துப்பாளையம், புதுப்பாளையம், சிறுக்களஞ்சி மற்றும் வாய்ப்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு சென்னிமலை நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது.
முகாமில் கலந்து கொள்ளும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், கூட்டு வரைபடம், நில பத்திர நகல், வில்லங்க சான்றிதழ் உள்ளிட்ட தேவையான நகல்களை கொண்டு வரும்படி வேளாண்மைத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







