தி.மு.க. மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம்

பெருந்துறையில் நடைபெறவுள்ள தி.மு.க. மண்டல மாநாட்டின் பாதுகாப்பு குறித்த மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பெருந்துறையில் நடைபெறவுள்ள தி.மு.க. மண்டல மாநாட்டின் பாதுகாப்பு குறித்த மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பெருந்துறையில் தி.மு.க. சார்பில் மாநில உரிமை, சமத்துவம், மதசார்பின்மை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் 2 நாள்கள் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து தொண்டர் அணி சார்பில், மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவருமான சு.முத்துசாமி தலைமை வகித்தார். மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்னிலை வகித்தார். பெருந்துறை ஒன்றியச் செயலாளர் கே.பி.சாமி வரவேற்றார். 
கூட்டத்தில், மாநில அமைப்பாளர் நாகை முருகன், ஆவின் ஆறுமுகம், சேலம் கோமான் ஆகியோர் தொண்டர் அணியினருக்கு மாநாட்டு பாதுகாப்புப் பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். மேலும், மாநாட்டில் முதன்மைப் பாதுகாப்பில் தொண்டரணியினர் 1,500 பேர் ஈடுபடுவார்கள் எனத் தெரிவித்தனர்.
இதில், தி.மு.க. கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார், மாநில நெசவாளரணி செயலாளர் சச்சிதானந்தம், மாநகர செயலாளர் மு.சுப்பிரமணி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com