தமிழகத்தில் கோயம்பேட்டைத் தவிர வேறெங்கும் காற்று மாசு இல்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
இதுகுறித்து, ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தூத்துக்குடி பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூலமாக என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து அரசுச் செயலர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ. 100 கோடி நிதியளித்துள்ளனர். தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 135 கோடியாக உள்ளது. இந்தத் தொகை மூலமாக அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்துதர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சென்னை- கோயம்பேட்டில் மட்டுமே அவ்வப்போது காற்று மாசு ஏற்படுகிறது. அதுவும் சிறிது நேரத்தில் சரியாகி விடுகிறது.
ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ திட்டங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருந்தாலும், அந்தத் திட்டங்கள் அமையும் பகுதிகளில் உள்ள மக்களிடம் இதுகுறித்து கருத்து கேட்க தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அறிக்கை அளித்த பின்னர் அதன் அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும்.
சாய ஆலைகளில் இருந்து சாயக் கழிவுநீர் வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வந்த புகாரின் அடிப்படையில் 68 சாய, சலவைப் பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவுப்படி, நாமக்கல், எடப்பாடி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி இயங்கி வந்த சாய, சலவை ஆலைகள் அகற்றப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சோனி பிஎஸ்5 ப்ரோ விலை என்ன? மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!

கருப்புசாமி, கரசாமி யாருக்கு வெற்றி?

திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

