எஸ்.எஸ்.ஐ.க்களுக்கு பெருந்துறையில் பயிற்சி
எஸ்.எஸ்.ஐ.க்களுக்குப் பெருந்துறையில் சிறப்புப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (மே 13) அளிக்கப்படவுள்ளது.


எஸ்.எஸ்.ஐ.க்களுக்குப் பெருந்துறையில் சிறப்புப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (மே 13) அளிக்கப்படவுள்ளது.
கோவை சரகத்துக்கு உள்பட்ட கோவை மாநகர், புறநகர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பணிபுரியும் 1986-இல் காவலர்களாகப் பணியில் சேர்ந்து, தற்போது சிறப்பு உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ள 77 பேருக்கு, உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதற்காக, இவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான முகாம், பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 13) தொடங்கியது.
இப்பயிற்சியில், கவாத்துப் பயிற்சி, ஆயுதங்களைக் கையாளுதல், சட்டம் ஒழுங்கு குறித்து ஒன்பது வாரங்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியை, ஈரோடு மதுவிலக்கு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ரமேஷ் அளிக்கிறார். இதைத் தொடர்ந்து, காவல் நிலையப் பணி ஒரு மாதம் வழங்கப்படும். அதன் பிறகு எஸ்.ஐ.யாக பணியமர்த்தப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...