எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஈரோடு குடிநீரேற்று நிலையங்களில் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஈரோடு நகருக்கு குடிநீர் விநியோகம் நடைபெறும் நீரேற்று நிலையங்களின் மறு

Updated On :3 செப்டம்பர் 2018, 7:42 pm

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஈரோடு நகருக்கு குடிநீர் விநியோகம் நடைபெறும் நீரேற்று நிலையங்களின் மறு சீரமைப்புப் பணிகளை ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு, மேற்கு சட்டப் பேரவை  உறுப்பினர் கே.வி.இராமலிங்கம் ஆகியோர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டனர்.
ஈரோடு  அருகே காவிரிக் கரையோரம் செயல்பட்டு வரும் வைரம்பாளையம் நீரேற்று நிலையத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம், காவிரி ஆற்றின் நடுவில் உள்ள நீரேற்று நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
கடந்த 10  நாள்களுக்கு முன் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. 
இதன் மூலம், கரையோரப் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், ஆற்றில் அதிக அளவில் நீர் சென்றதால் அங்கிருந்து வரும் தண்ணீரை கரையோரம் உள்ள நீரேற்று நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு 
விநியோகிக்கப்பட்டது. 
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கரையோர நீரேற்று நிலையத்திலிருந்து  தண்ணீர் எடுக்க முடியவில்லை. 
இதனால், காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து மீண்டும் நீரை எடுக்க மாநகராட்சி நடவடிக்கை  எடுத்து வருகிறது. 
அதற்காக,  வைரம்பாளையத்தில்  உள்ள நீரேற்று நிலையத்தை சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, கே.வி.இராமலிங்கம், உதவி ஆணையர்கள், பொறியாளர்கள் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.