மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சதுர்த்தி விழாவுக்காக முழுவீச்சில் தயாராகும் விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஈரோடு அருகே 3 அடி முதல் 11 அடி உயரத்தில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:20 am

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஈரோடு அருகே 3 அடி முதல் 11 அடி உயரத்தில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவது, ஊர்வலம் நடத்துவது  தொடர்பாக ஆலோசனைகள் மாவட்டம் முழுதும் நடத்தப்பட்டு வருகின்றன. 
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பவானி உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,300 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
ஈரோடு அருகே வெட்டுக்காட்டுவலசு, கணபதி நகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர். பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள  விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி மட்டுமே நிலுவையில் உள்ளது.
விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  3 அடி முதல் 11 அடி வரை உயரம் வரையிலான விநாயகர் உருவச் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தச் சிலைகள் மைதா மாவு, பேப்பர் மாவு ஆகிய கலவைகள் மூலம் தயாராகின்றன. சிம்ம வாகன விநாயகர், மான் வாகன விநாயகர், மயில் வாகன விநாயகர், குதிரை வாகன விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், முருகனை மடியில் வைத்திருக்கும் விநாயகர், சிவலிங்கம் வைத்திருக்கும் விநாயகர் உள்பட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தச் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள்  ஓரிரு நாளில் நிறைவடைந்து விடும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.