சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சென்னிமலையில் மாவட்ட சிலம்பப் போட்டி

ஈரோடு மாவட்ட சிலம்பம் விளையாட்டுச் சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள், சென்னிமலை, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:35 pm

ஈரோடு மாவட்ட சிலம்பம் விளையாட்டுச் சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள், சென்னிமலை, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டிகள், மிக இளையோர், இளையோர், மூத்தோர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில், மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கொங்கு பள்ளித் தலைவர் சு.கந்தசாமி தலைமை வகித்து போட்டிகளைத் துவக்கி வைத்தார்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, பள்ளித் தாளாளர் வி.எஸ்.தங்கமுத்து தலைமை வகித்தார். பள்ளிப் பொருளாளர் என்.டி.ராஜேந்திரன், சென்னிமலை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் கே.தெய்வசிகாமணி ஆகியோர் பரிசு வழங்கிப் பாராட்டினர்.
இதில், பெருந்துறை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் சி.பொன்னுதுரை, பள்ளி முதல்வர் அசோக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிலம்பம் விளையாட்டுச் சங்க துணைச் செயலாளர் டி.சி.ராமசுப்பையன் நன்றி கூறினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சிலம்பம் விளையாட்டுச் சங்கத் தலைவர் கே.யுவராஜ், செயலாளர் எஸ்.கண்ணதாசன், பொருளாளர் சாமி (எ) ரத்தினம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.