ஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

செப்டம்பர் 4 மின்தடை: பெருந்துறை சிப்காட், தளவாய்ப்பேட்டை

Updated On :3 செப்டம்பர் 2018, 1:19 am

பெருந்துறை தொழில்பேட்டை, தளவாய்ப்பேட்டை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2  மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த பெருந்துறை சிப்காட்  துணை மின்  நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படுகின்றன. 
எனவே, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெருந்துறை மேற்கு பகுதிக்கு உள்பட்ட கோட்டைமேடு, கருக்கங்காட்டூர், பெரிய மடத்துப்பாளையம், சின்ன மடத்துப்பாளையம்,  கள்ளியம்புதூர், மாயா அவென்யூ, சானிடோரியம், சிப்காட் எஸ்இஇசட் வளாகம், சீனாபுரம், துடுப்பதி, அய்யப்பா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 4) மின் தடை ஏற்படும்.
தளவாய்ப்பேட்டை: கோபி மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட தளவாய்ப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
எனவே, இங்கிருந்து மின் விநியோகம் பெறும்,  தளவாய்ப்பேட்டை, ஜம்பை, பெரிய வடமலைபாளையம், புன்னம், காடையம்பட்டி, தொட்டிப்பாளையம், ஒரிச்சேரி, ஆப்பக்கூடல், கூத்தம்பூண்டி, புதுப்பாளையம், நல்லிபாளையம், ஐடியல் நகர், ஆதர்ஷ் நகர், பெரியார் நகர், அண்ணா நகர், பெரிய புலியூர், வைரமங்கலம், எலவமலை, திப்பிசெட்டிபாளையம், காமராஜ் நகர், குடிநீரேற்று நிலையங்கள், மணக்காடு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 4) மின்தடை ஏற்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.