மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் இலக்கிய மன்ற விழா, அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:35 pm

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் இலக்கிய மன்ற விழா, அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, செங்குந்தர் கல்விக் கழக துணைத் தலைவர் ஆர்.எஸ்.நடராஜ முதலியார்  தலைமை  வகித்தார். செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியின் செயலர் எஸ்.சிவானந்தன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பவா.செல்லத்துரை கலந்துகொண்டு "வாழ்விலிருந்து இலக்கியம்' எனும் தலைப்பில் பேசினார். தொடர்ந்து, சென்ற ஆண்டு அரசு பொதுத் தேர்வில் முதல்நிலை பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார். 
பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர்  எஸ்.பி.ஆறுமுகம் வாழ்த்திப் பேசினார். செங்குந்தர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.வேலுமணி வரவேற்றார். உதவித் தலைமையாசிரியர் எஸ்.தெய்வசேனாதிபதி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.