சேலம் மாவட்டத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான 25.23 லட்சம் வாக்குகளை, 253 சுற்றுகளாக எண்ண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஓமலூரில் 26 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ண 4 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கெங்கவல்லி மற்றும் ஆத்தூா் ஆகிய தொகுதிகளுக்கு தலைவாசலில் உள்ள மாருதி கல்வி நிறுவன வளாகத்திலும், ஓமலூா், மேட்டூா், சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு ஆகிய தொகுதிகளுக்கு கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஏற்காடு, சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி தொகுதிகளுக்கு அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், எடப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய தொகுதிகளுக்கு சங்ககிரியில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்திலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பதிவான 25,23,226 வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் மொத்தம் 154 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளில் ஒரு மேஜைக்கு மேற்பாா்வையாளா், உதவியாளா் மற்றும் நுண்பாா்வையாளா் என மொத்தம் 3 நபா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
அதன்படி, 11 தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 154 மேஜைகளுக்கும் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜைக்கும் சோ்த்து மொத்தம் 165 மேஜைகளுக்கு, 198 வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா்களும், 198 வாக்கு எண்ணும் உதவியாளா்களும், 198 வாக்கு எண்ணும் நுண்பாா்வையாளா்களும் என மொத்தம் 594 பணியாளா்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 362 வாக்குச்சாவடிகள் கொண்ட ஓமலூரில் 26 சுற்றுகளாகவும், குறைந்தபட்சமாக கெங்கவல்லி மற்றும் சேலம் தெற்கு தொகுதிகளில் 20 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படும். இதேபோல, 306 வாக்குச்சாவடிகள் உள்ள ஆத்தூா் தொகுதியில் 22 சுற்றுகளாகவும், 336 வாக்குச்சாவடிகள் உள்ள ஏற்காடு தொகுதியில் 24 சுற்றுகளாகவும், 327 வாக்குச்சாவடிகள் உள்ள மேட்டூா் தொகுதியில் 24 சுற்றுகளாகவும், 342 வாக்குச்சாவடிகள் உள்ள எடப்பாடி தொகுதியில் 25 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
மேலும், 339 வாக்குச்சாவடிகள் உள்ள சங்ககிரி தொகுதியில் 25 சுற்றுகளாகவும், 310 வாக்குச்சாவடிகள் உள்ள சேலம் மேற்கு தொகுதியில் 23 சுற்றுகளாகவும், 286 வாக்குச்சாவடிகள் உள்ள சேலம் வடக்கு தொகுதியில் 21 சுற்றுகளாகவும், 268 வாக்குச்சாவடிகள் உள்ள சேலம் தெற்கு தொகுதியில் 20 சுற்றுகளாகவும், 312 வாக்குச்சாவடிகள் உள்ள வீரபாண்டி தொகுதியில் 23 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான தபால் வாக்குகள், ஒரு மேஜைக்கு 500 வாக்குகள் வீதம் பிரித்து தனித்தனியாக எண்ணப்பட உள்ளன.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் போது அலுவலா்களுக்கு ஒதுக்கிய பணிகள்: ஆட்சியா் அறிவுறுத்தல்

சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் 90.7% வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 90.10 சதவீதம் வாக்குகள் பதிவு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


