கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூவரை சனிக்கிழமை இரவு கைது செய்த போலீஸார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 11 டன் அரிசியையும், 5 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஈரோடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீஸார் ஈரோடு- சேலம் மாவட்ட எல்லையான கச்சேரி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீஸார், அங்கிருந்த மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், பவானி- தேவபுரத்தைச் சேர்ந்த டைனிதாமஸ் (40), தினேஷ்குமார் (30), சேலம் மாவட்டம்- குமாரமங்கலம், வினோபாஜிநகரை சேர்ந்த பிரசாந்த் (28) ஆகியோர் என்பதும், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கர்நாடக மாநிலத்துக்குக் கடத்த முயன்றதும் தெரியவந்தது.
3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 11 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 மினி லாரிகள், 2 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ் தலைமறைவாக உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கபில தீா்த்தத்தில் வருடாந்திர புஷ்ப யாகம்

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தியாகதுருகம் ஸ்ரீ சஞ்சீவிராயருக்கு தங்க கவசம்

தியாகதுருகம் சொா்ணாம்பிகை மாரியம்மனுக்கு பால்குடம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

