சத்தியமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த கோழியை மீட்கச் சென்ற விவசாயி கயிறு அறுந்ததில் கிணற்றில் தவறி விழுந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த புதுரோடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி, தோட்டத்தில் கோழி வளர்த்து வருகிறார். கோழிக் கூண்டில் கட்டியிருந்த கோழிகளை முத்துசாமி அவிழ்த்து விட்டிருந்தார். அப்போது, கோழி ஒன்று வேகமாக பறந்து ஓடியபோது அருகில் உள்ள வறண்ட கிணற்றில் தவறி விழுந்தது. கோழியின் சப்தம் கேட்டு கிணற்றில் பார்த்தபோது கோழி உயிருடன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, முத்துசாமி கோழியை மீட்க தோட்டத்தில் இருந்த கயிறு மூலம் கிணற்றில் இறங்கினார். அப்போது, பாரம் தாங்காமல் கயிறு அறுந்ததில் கிணற்றில் விழுந்தார். இதுகுறித்து, பக்கத்து தோட்டத்துக்காரர்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த நிலைய அலுவலர் கே.எம்.விஜயகுமார், போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரன், யேசுராஜ் ஆகியோர் தலைமையிலான தீயணைப்புப் படையினர் கயிறு, பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் கிணற்றில் இறங்கி முத்துசாமியையும், கோழியையும் மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரபு தேவா - வடிவேலு நடிக்கும் பேங் பேங் படத்தின் டீசர் வெளியீடு!

கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 15 - நேரலை!

முதல்வர் விஜய் பற்றிய அவதூறு: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்!
சுதந்திர நாள் விழா க்ளிக்ஸ்...
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


