
கடந்த 500 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் கொடிவேரி அணையைப் பாதுகாக்க வேண்டும் என தடப்பள்ளி - அரக்கன்கோட்டை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அச்சங்கத்தின் சார்பில் நிர்வாகி சுபி.தளபதி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொடிவேரி அணை உருவாக்கப்பட்டு 525 ஆண்டுகளில் பல முறை பெருமழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகால இடைவெளியில் ஆகஸ்ட் மாதம் வெளியேறிய நீரின் அளவுதான் அதிகபட்சமாகும். சராசரியாக 75 ஆயிரம் கன அடி நீர் பாய்ந்தோடி 16 பங்கு அளவுக்கு வீணாகக் கடலில் கலந்தது. இதை முறைவைத்து பாசனத்துக்கு கொடுத்தால் கொடிவேரி, காலிங்கராயன் பாசனத்துக்கு ஒரு ஆண்டுக்குப் போதுமானதாக இருந்திருக்கும்.
கடந்த பல ஆண்டுகளாக பவானி ஆறு தூய்மையற்று ஆகாயத் தாமரை மூடிய கழிவு ஆறாக இருந்தது. மணல் திருட்டால் நீர் ஊற்றுகளும், கூட்டுக் குடிநீர்த் திட்டமும் செயலற்று போயிருந்தது. மேலும், கொடிவேரி அணை மக்களின் அலட்சியத்தால், பொதுப் பணித்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாடு இன்மையால் குப்பை மேடாகக் காட்சியளித்தது. இந்நிலையில், பவானி ஆற்றில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேற்படி அனைத்தையும் இயற்கை ஒரே நாளில் சரி செய்துவிட்டு சென்றுவிட்டது.
திட, திரவக் கழிவுகளை ஆற்றில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றின் கரைகளில் ஒதுங்கியுள்ள மணலை கண் போல் காக்க உறுதியேற்று திருடர்களின் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கொடிவேரி அணையின் உட்புற ஆற்றுப் பகுதிக்குள் உணவுக் கடைகளை வைக்கவும், மக்கள் உணவருந்தும் இடமாக அவ்விடத்தைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





