6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பவானி சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறையில் 125 திருமணங்கள்

பவானி சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறையில் 125 க்கும் மேற்பட்ட திருமணங்கள் புதன்கிழமை நடைபெற்றன.

Published On :

பவானி சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறையில் 125 க்கும் மேற்பட்ட திருமணங்கள் புதன்கிழமை நடைபெற்றன. இதனால், கோயில் வளாகம் புதுமணத் தம்பதிகள், உறவினர்கள் கூட்டமாகக் காணப்பட்டது. 
 முகூர்த்த நாளான புதன்கிழமை பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆதிகேசவப் பெருமாள் கோயில் சன்னிதிகளில் 45 திருமணங்கள் நடைபெற்றன. உறவினர்கள் சூழ நடைபெற்ற இத்திருமணங்கள் அடுத்தடுத்து நடைபெற்றதால் கோயில்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
 அதேநேரத்தில், பவானி - காவிரி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறை பகுதியில் 90 க்கும் மேற்பட் திருமணங்கள் நடத்தப்பட்டன. உள்ளூர், வெளியூர்களிலிருந்து வந்த ஜோடிகள் திருமணம் முடிந்து மாலையும், கழுத்துமாக அடுத்தடுத்து வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.