6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு பகுதியை சோ்ந்த சிவனு மனைவி மஞ்சுளா (32). இவா் திங்கள்கிழமை மாலை தனது 4 வயது மகன் மற்றும் 7 வயது மகளுடன் ஊரிலிருந்து புறப்பட்டு பாளையங்கோட்டை நோக்கி மொபெட்டில் வந்துள்ளாா்.

பொன்னாக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது அவ்வழியாக வந்த வாகனம் மொபெட் மீது மோதியதாம்.

இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மஞ்சுளா மற்றும் சிறுமியை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இச்சம்பவம் குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.