கமல், ரஜினி இணைந்து செயல்பட வேண்டும்: நடிகை பசி சத்யா

தமிழக அரசியல்களத்தில் கமல், ரஜினி ஆகியோர் இணைந்து செயல்பட்டால்  மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்றார் திரைப்பட நடிகை பசி. சத்யா.
Published on
Updated on
1 min read

தமிழக அரசியல்களத்தில் கமல், ரஜினி ஆகியோர் இணைந்து செயல்பட்டால்  மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்றார் திரைப்பட நடிகை பசி. சத்யா.
ஈரோட்டில் கவிதாலயம் இசைப் பள்ளி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியதாவது: 
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும்  அரசியலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதில், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என ரஜினியும், கிராமத்திலிருந்து அரசியல் தொடங்குவதாக அறிவித்து மக்கள் நீதிமய்யம் கண்ட கமல்ஹாசனும் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக களத்தில் இறங்கியுள்ளனர்.   இருவரும் இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும். மக்கள் விரும்பினால்தான் மாற்றம் வரும். திரைத் துறையிலிருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் முதல்வராக இருந்து  மக்களுக்கு நல்லது செய்தார்கள். திரைத் துறையிலிருந்து அரசியலுக்கு வருவதில் தவறில்லை.  இந்நிலையில், பல்வேறு பிரச்னைகளால் திரைப்பட உலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதைச் சீரமைக்க  நடிகர் சங்கத்தினரும், தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்து எடுத்துள்ள முடிவுகளுக்கு திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
 பாலியல் தொந்தரவு இருப்பது தெரிந்தால் அது திரைத் துறையாக இருந்தாலும் பிற துறைகளாக இருந்தாலும் பெண்கள் வரக் கூடாது. இப் பிரச்னை தொடர்பாக தற்போது நடிகைகள் பொதுவெளியில் பேசி வருவது தவறாகும். இதனால் பெண்களுக்குத்தான் கேவலம். திரைத் துறை மட்டுமல்ல, வேறு எந்தத் துறையாக இருந்தாலும் பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
திரைப்படமும் வாழ்க்கையும் ஒன்றிணைந்து இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். அதனால்தான் எந்த பிரச்னையாக இருந்தாலும் திரையுலகம் அதில் தனது பங்களிப்பை காலங்காலமாக  செய்து வருகிறது. திரையுலகம் நல்ல செழிப்புடன் உள்ளது. ஆனால், துணை நடிகர்கள் வாழ்க்கை வளமாக இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com