சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், திருமூலர் ஆய்விருக்கை மற்றும் கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றமும் இணைந்து "தமிழ்த்தாய்-71' என்ற தலைப்பில் திருக்குறள் அதிகாரத்தில் கவியரங்கம் ஏழு அமர்வுகளாக சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அம்மா தமிழ் பீடம் நிர்வாகி ஆவடி குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன் பங்கேற்று கவிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இக்கவியரங்கில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் விரிவுரையாளர் ச.கெளரிசங்கருக்கு திருக்குறள் விருது வழங்கப்பட்டது.
விழாவில், திருக்குறளில் உள்ள "வாய்மை' என்னும் அதிகாரத் தலைப்பில் நடந்த கவியரங்கத்துக்கு ச.கெளரிசங்கர் தலைமை வகித்தார். இதில், திருமூலர் ஆய்விருக்கை நிறுவனர் பேராசிரியர் மகாலட்சுமி, இலங்கை கவிஞர் எஸ்.பி.தாட்சாயணி சர்மா, தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் நந்திவரம் ப.சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டணர்.
நிகழ்வுகளை, கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்ற நிறுவனர் வேட்டவலம் எஸ்.எஸ்.இஸ்மாயில் ஒங்கிணைந்து நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்வீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

கேரளத்திலும் கால் பதிக்கும் தவெக! திருச்சூரில் மாவட்ட அளவிலான முதல் கூட்டம்!

ஃபகத் பாசில் புதிய படம் பூஜையுடன் துவங்கியது - புகைப்படங்கள்

கேரள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைச்சர்கள் பட்டியல்! வி.டி. சதீசன் அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
