தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

"ஓய்வுபெற்ற காவலர்களுக்கு தேர்தல் பாதுகாப்புப் பணி:விரும்பும் இடத்தில் வழங்கப்படும்'

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் ஓய்வுபெற்ற காவலர்களுக்கு விரும்பும்

Updated On :25 பிப்ரவரி 2019, 10:16 am IST

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் ஓய்வுபெற்ற காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணி வழங்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் தெரிவித்தார். 
மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஓய்வுபெற்ற காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு நசியனூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள ஓய்வுபெற்ற போலீஸாருக்கு அவர்கள் விரும்பிய இடங்களில் பணி வழங்கப்படும். ஓய்வுபெற்ற காவலர்கள் எந்தெந்தப் பகுதிகளில் வசித்து வருகிறீர்களோ அதே காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றலாம். இதில்  குறைகள் இருந்தால் அது தொடர்பான விவரங்களைத் தெரிவித்தால் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் ராஜ்குமார், ஓய்வுபெற்ற காவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.