மொடக்குறிச்சி தொகுதி அதிமுக, தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு ஈரோடு எம்.பி. எஸ்.செல்வக்குமாரசின்னையன் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ வரவேற்றார்.
முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு அனைத்து வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சித்த மருத்துவத்தின் பயன் குறித்து கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் கணபதி, ஆவின் இயக்குநர் அசோக், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மாரிமுத்து (எழுமாத்தூர்), சிவகாமி (அவல்பூந்துறை), சீனிவாசன் (கணபதிபாளையம்), வினோத்குமார் (கவுந்தப்பாடி), கெளரி (ஜெயராமபுரம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறி
அதிமுக உள்கட்சி மோதல்: தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
