திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

விஜயமங்கலம் சசூரி கல்லூரியில் கலை விழா

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், நடுப்பட்டி, சசூரி கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு

Updated On :25 பிப்ரவரி 2019, 10:13 am IST

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், நடுப்பட்டி, சசூரி கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இடையே "சிரிஷ்டா-19' என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.
விழாவுக்கு கல்லூரித் தாளாளர் அ.மு.கந்தசாமி தலைமை வகித்தார். முதல்வர் சு.விமல்ஆனந்த் வரவேற்றார்.
முதல் நாள், பள்ளிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சியில், 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
 இரண்டாவது நாள், கல்லூரிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
விழாவில், சிறப்பு அழைப்பாளராக, திரைப்பட நடிகர்கள் சதீஷ், ரியோராஜ், திரைப்பட நடிகை ஜனனி ஐயர் ஆகியோர் கலந்துகொண்டு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினர். விழாவில், கல்லூரி மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சேகரித்த விவசாயம் சார்ந்த பொருள்களான மண்வெட்டி, மோட்டார் பம்புகள், விதைகள், உரங்கள் மற்றும் மரக்கன்றுகள் நலிவடைந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.