தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

அவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் ரூ. 54 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 54 லட்சத்துக்கு  கொப்பரை ஏலம் நடைபெற்றது. 

Updated On :15 ஜனவரி 2019, 5:32 am IST

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 54 லட்சத்துக்கு  கொப்பரை ஏலம் நடைபெற்றது. 
மொடக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,096 மூட்டைகளில் 55 ஆயிரத்து 821 கிலோ எடையுள்ள கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். 
இதில், முதல் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 122.35 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 120.05 க்கும், இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 120.85 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 60.95 க்கும் என மொத்தம் ரூ. 54 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
இதேபோல, 5,161 கிலோ எடையுள்ள 15,140 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், அதிக விலையாக டன் ரூ. 42 ஆயிரத்து 390 க்கும், குறைந்த விலையாக டன் ரூ. 25 ஆயிரத்து 690 க்கும் என ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் ஒன்றுக்கு ரூ. 8.42 முதல் ரூ. 16.95 வரை ஏலம் நடைபெற்றது என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் இரா.சதீஷ்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.