மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்:ஈரோட்டில் ஜனவரி 29இல் தொடக்கம்

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 29 முதல் 31 ஆம் தேதி வரை

Updated On :24 ஜனவரி 2019, 12:24 am IST

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 29 முதல் 31 ஆம் தேதி வரை ஈரோட்டில் பின்வரும் இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: முதல்வர் கோப்பைக்கு 2018-2019 ஆம் ஆண்டின் ஆடவர், மகளிருக்கான ஈரோடு மாவட்ட அளவிலான தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கையுந்துப் பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், கைப்பந்து, பூப்பந்து, மேஜைப் பந்து ஆகிய 10 பிரிவு விளையாட்டுகள் ஜனவரி 29 முதல் 31 ஆம் தேதி வரை ஈரோடு மாவட்ட விளையாட்டரங்கில்  நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்பவர்கள் 31.12.2018 அன்று 21 வயதுக்கு உள்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் (1.1.1998 அன்றும் அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்). 
மாவட்ட அளவிலான தனிநபர், குழுப் போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 ஆண்டுகளாவது வசித்து வருவதற்கான சான்றைக் கொண்டு வர வேண்டும். மாவட்ட அளவில் தேர்வு பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும். மாவட்ட அளவில் குழு, தனி நபர் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வென்றவர்களுக்கு  முறையே தலா ரூ. 1,000, ரூ. 750, ரூ. 500 வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு பயணப் படி, தினப்படி வழங்கப்பட மாட்டாது. 
விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாள், இடங்கள்:ஜனவரி 29 ஆம் தேதி தடகளம், ஆடவர், மகளிர்,  நீச்சல், கூடைப்பந்து, கையுந்துப் பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக் ஆகிய போட்டிகள் வ.உ.சி. பூங்கா விளையாட்டரங்கிலும், 30 ஆம் தேதி மேஜைப்பந்து போட்டிகள் ஈரோடு ராம் ஸ்போர்ட்ஸ் அரங்கிலும், 31 ஆம் தேதி பளு தூக்குதல் போட்டிகள் ஈரோடு ரங்கம்பாளையம் ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியிலும், பூப்பந்துப் போட்டிகள் ஈரோடு தாமரை மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறவுள்ளன. மாநில அளவிலான குழு, தனிநபர் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், மேலாளர்கள் ஆகியோருக்கு  விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் பயணப்படி வழங்கப்படும். மாநில அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகளுக்கு முறையே தலா ரூ. 1 லட்சம், ரூ. 75 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும். பயணப்படி, தினப்படி, சீருடைகள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன்  அலுவலர் நோயலின் ஜானை 74017-03490, 0424-2223157 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.