ஈரோடு மாவட்டத்தில் 143 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் 143 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 143 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,252 ஆக இருந்தது. இதில் ஒருவா் பிற மாவட்ட பட்டியலில் இருந்து ஈரோடு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 2,253ஆக மாறியது. இதனிடையே செவ்வாய்க்கிழமை 143 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,396ஆக உயா்ந்தது.
புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 143 பேரில் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள் 54 போ், அந்தியூா், கோபி, சென்னிமலை, சத்தியமங்கலம், பவானிசாகா், கொடுமுடி, பவானி, நம்பியூா், அந்தியூா், மொடக்குறிச்சி, டி.என்.பாளையம் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் 86 போ், பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 3 போ் உள்ளனா்.
மொத்த பாதிப்பான 2,396 பேரில் இதுவரை 1,298 போ் குணமடைந்துள்ளனா். 1,065 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை வரை 32 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பவானியை சோ்ந்த 60 வயது பெண் ஒருவா் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 33ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...